Blog Archive

Sunday, July 7, 2024

K. Armstrong: leader of the mass

 



This week, Armstrong was brutally murdered by 8 men near his residence in Perambur.  After his demise, social media began to fill with how this man has uplifted many youths and become the voice of the oppressed in Tamil Nadu, especially in North Chennai.    He dedicated his time to uplifting youths with education and professional pursuits.  Due to his advocacy, many lawyers and professionals represent the Dalit community. 

Armstrong was the Tamil Nadu president of  Bahujan Samaj Party (BSP) and an advocate by profession.  He was also a former councilor of Chennai Corporation. Though we failed to hear much about him in the media, and political sector,  he was known for his active role in local politics, especially of Dalits.  In 2011, he contested in Kolathur constituency with a huge influx of supporters yet this did not convert into votes.  It should be mentioned that he contested against M.K. Stalin and is known to criticize the DMK government and its nepotistic culture.   

While those lives he touched are mourning him, DMK IT wing is in full-fledged mode of slandering his legacy with fake news propagation.  What is the reason behind this propaganda?  DMK is known for oppressing TAMIL leaders and their voices: we have seen how they oppressed Vaiko, Thiruma, Vijaykanth, Seeman, and now Vijay. When Thiruma gained political momentum, M.Karunanithi burned down an entire village to prevent his fame.  We continue to see how hard they work to slander Seeman.  Due to social media and the public having access to news outside of State-controlled media, Seeman and Vijay are surviving but unfortunately, people like Thiruma and Vijaykanth couldn't.   Unless one becomes an alliance with DMK and becomes their 'indentured laborer', being successful or even staying alive becomes a challenge under DMK.  

[Known] Political murders under DMK:  

  • 1971 - Uthayakumar [college student]
  • 1997 - Pazhani Baba
  • 1997 - Leelavathi
  • 2003 - T. Krishnan
  • 2011 - Sathik Badsha
  • 2024 - Armstrong


Even with Armstrong's murder, DMK's role is suspected as one of the arrested suspects is affiliated with DMK:


DMK claims to bring social justice but the concept of 'Dravidam' is purely an exchange of power from Brahmins to Pannaiyaars.  We have seen how oppressed are continue to be oppressed, from Vengaivayal to Kallakurichi.  Tamil leaders are always shunned away and abused by DMK, those listed above, and how they have been slurring Tamils of Eezham since they came to power.  Power and money are used to oppress Tamils and to also make sure no Tamil leaders are NOT acknowledged.  

DMK continues to fail to whitewash their legacy written in blood: as Eezha Tamils continues to fight against them, followers of Armstrong will surely carry his legacy forward.   To honor him, every single one of them should become the voice of the oppressed and fight against Pannaiyarism in Tamil Nadu to bring a government that treats ALL Tamils as Tamils, not based on caste.  We truly hope this is also a wake-up call for people like Thiruma and Pa. Ranjith who continue to ally with DMK and endorse other oppressions.  Pa. Ranjith's Neelam is a prominent voice in whitewashing the Tamil genocide. May Armstrong's death reflect how DMK/Dravidam is oppressing prominent Tamil voices and causes.  

Prominent advocate and voice for Dalits: gone too soon, rest easy sir. Your children will follow in your footsteps.  💙



Sunday, June 30, 2024

திராவிடர் காட்டில் புழுகுகளும் புரட்டுகளும்: லஜபதி உருட்டுகள் by Thevan Karuppan

கரிகாலன் என்ற தமிழ்ப்பெயரில் ஒளிந்திருக்கும் தெலுங்குக் கிருபாகரன் நடாத்தும் "கிரிகாலன் magic show" இல் புதிதாக ஒரு திமுக வின் மானுடவியல் ஆய்வாளர் என்ற பெயரில் லஜபதி என்றொருவரை நேர்காணல் செய்திருக்கிறார். ஒன்றரை மணிநேரம் அது ஓடுகிறது. திமுகவும் அதன் கூட்டாளிகளும் எவ்வாறு எமது போராட்டத்தின் மீது சேறடிக்கிறார்கள் என்பதற்குச் சிறந்த எடுகோள் இக்காணொளி.


இதை விளங்கிக்கொள்ள சில திகதிகளை நினைவில் வைத்திருப்போம்.

26.05.1987 அன்று Operation Liberation தொடங்குகிறது.04.06.1987 அன்று Operation பூமாலை என்ற பெயரில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு வந்த விண்ணுந்துகள் யாழ்ப்பாணத்தில் உணவுப்பொருட்களைத் தரையிறக்குகின்றன.

05.07.1987 அன்று கரும்புலி கப்டன் மில்லர் அவர்களது தாக்குதல் நிகழ்கிறது.

29.07.1987 அன்று இந்திய - சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது. அதன்பின்னர் இந்திய இராணுவம் தமிழ்மண்ணில் கால் வைக்கிறது.


இப்போது விடயத்திற்கு வருகிறேன். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவிருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தனது War and Peace நூலில் மில்லர் தாக்குதல் பற்றி எழுதியிருப்பது முழுப்பொய் என்கிறார் லஜபதி. 

பாலசிங்கம் அவர்கள் தனது நூலில் சொல்வதைப்போல Operation Libetation நடவடிக்கை மில்லரின் தாக்குதலால் நிறுத்தப்படவில்லை என்றும், இந்தியாவின் தலையீட்டால்தான் Op. Liberation ஐ சிறிலங்கா அரசு நிறுத்தியதாகவும் கூறும் லஜபதி,நெல்லியடியில் க+பு+லித்தாக்குதல் நடாத்தப்பட்டது இந்திய-சிறிலங்காவின் ஒப்பந்தத்தைக் குழப்புவதற்கு பிரபாகரன் செய்த நடவடிக்கை என்றும் பிதற்றுகிறார்.

இவர் Wikipedia வாசகர் என நினைக்கிறேன். Opearation பூமாலை இந்தியாவால் நடாத்தப்பட்டது Operation Liberation ஐ நிறுத்த அல்ல. தமிழகத்தில் இராஜீவிற்கு எதிராக எழுந்த எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கே நடாத்தப்பட்டது. முதன்முதலில் 1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடந்த கடையடைப்புப்போல இன்றுவரை ஏதும் நிகழவில்லை என அறிந்திருக்கிறேன். இதனால் தமது ஆட்சிக்குக் களங்கம் வந்துவிடக்கூடாது என அஞ்சிய இராஜீவ் போட்ட நாடகமே Op.பூமாலை. உண்மையில் இராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டுமென்றால் சிறிலங்கா இராணுவம் இதற்குமேல் முன்னேறினால் தாக்குவோம் என்று பேச்சுக்குத்தானும் சொல்லக்கூடிய பலத்தில் இந்தியா அன்று இருந்தது. . (தவிபு கள் யாழ்ப்பாணத்தைப் பிடித்துவிடக்கூடாது என சந்திரிக்கா இந்தியாவிடம் ஓடியபோது அதுவே நிகழ்ந்தது).

Opearation Liberation நடவடிக்கைக்கு முன்பதாக தவிபுகளுக்கு RAW ஒரு தவறான தகவலை வழங்குகிறது. அதாவது யாழ்.நகர் மீது சிறிலங்கா இராணுவம் பெருந்தாக்குதலை நிகழ்த்தப்போவதாகவும், "உங்கள் படையணிகளை யாழ்நகரில் நிறுத்துங்கள்" என்பதுதான் அது. அதை நம்பி நாம் ஏமாந்தோம் என்கிறார் பாலசிங்கம். ஏனெனில் அவ்வளவிற்கு இந்தியாவை மிகவும் நம்பியிருந்தனர் தவிபுகள்.
இராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ளுமளவிற்கு எம்மிடம் பலமிருக்கவில்லை என்பதால் பின்வாங்க நேரிட்டது என பின்னர் தவிபுகள் அறியத்தந்தனர். யாருமேயற்ற வெளிகளூடாக முன்னேறி நெல்லியடி மத்தியமகாவித்தியாலயத்தில் இருந்த சிங்களப் படைமீதுதான் மில்லர் தாக்குதல் நடாத்தினார். அதற்குமேல் சிறிலங்காஇராணுவம் முன்னேறக் கூடாது என்பதற்கான உளவியல்தாக்கத்தை உண்டுசெய்யும் விதமாகவே தலைவர் தாக்குதலுக்கு அனுமதி வழங்கியிருந்தார்.

இனி லஜபதியின் பொய்களுக்கு வருகிறேன்:

1.இந்திய சிறிலங்கா ஒப்பந்தத்தைக் குழப்புவதற்குத்தான் தவிபு நெல்லியடியில் தாக்குதல் நடாத்தியதென்பது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவதாகும். அவ்வாறாயின் இந்தியாவை வரவேற்று, அவர்களிடம் ஆயுத ஒப்படைப்பை ஏன் புலிகள் நடாத்தவேண்டும் ?

2. ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பிறகு இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்; "எனது வேலையை இனி இந்தியா செய்யும்" என ஜெயவர்த்தன கூறியதன் பொருள் யாதெனில், நான் அழிக்கவேண்டிய தவிபு களை இந்தியா அழிக்கும் என்பதோடு, புலிகளை அழிப்பதற்காகவே மிகத்தீவிரமாகப் போடப்பட்ட ஒப்பந்தம் அதுவென்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார். இந்த ஒப்பந்தந்தைப் புலிகள் குழப்பவேண்டுமென்றால் இந்தியா காலடிவைத்த உடனேயே இந்தியாவைத் தாக்கியிருக்க வேண்டுமல்லவா ?

3. தியாகதீபம் திலீபன் உண்ணாதிருந்து சாவடைந்தபோது அவர் வைத்த ஆகக்குறைந்த கோரிக்கைகளில் ஒன்று "வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறும் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்படவேண்டும்" என்பதாகும். லஜபதி சொல்வதைப் போல; "தவிபு கள் குழப்பாமலிருந்தால் வடக்கு கிழக்கு இணைவோடு தமிழருக்கு நாடு பிறந்திருக்கும்" என்றால், எவ்விததாக்குதலையும் நடத்தாது ஆகக்குறைந்த கோரிக்கைகளோடு அமைதி வழியில் போராடிய லெப்.கேணல் திலீபனை இந்திய இராணுவ அதிகாரிகள் சந்திக்க மறுத்தனர் ? ஏன் சிங்களக் குடியேற்றங்களை இந்திய இராணுவத்தால் நிறுத்த இயலவில்லை ?


திராவிட லஜபதியின் உருட்டுகளில் மிக மோசமான உருட்டு, தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா மற்றும் லெப்.கேணல் புலேந்திரன் தொடர்பான உருட்டு.


லெப்.கேணல் குமரப்பா அவர்கள் கைதுசெய்யப்பட்டது 03.10.1987 அன்று ஆகும். அவர்கள் குப்பி கடித்தது 05.10.1987 . முதலில்  அவர்களைக்காங்கேசன்துறை முகாமில் வைத்திருந்துவிட்டு பின்னர் பலாலி முகாமிற்குக் கொண்டுசெல்கிறார்கள். அந்த இரண்டுநாளும் அவர்கள் இந்திய இராணுவம் தலையிட்டுத் தம்மை விடுவிக்கும் என்றே காத்திருக்கிறார்கள். அது நடைபெறவில்லையாதலால், அவர்களைக் கொழும்பிற்குக் கொண்டுசென்று சிறிலங்கா அரசிடம் கையளிக்கும் திட்டம் இந்திய இராணுவ அதிகாரி மூலமாக அறிந்தபின்னரே,அவர்கள் சித்திரவதைக்கு உட்படக்கூடும் என்ற நிலையில் குப்பி கடிக்கிறார்கள்.இதில், ´´பிர...கரன் வேண்டுமென்றே அவர்களை நஞ்சூட்டிக்கொலை செய்தததாகவும், அதை பாலசிங்கம் அவர்கள் ஒப்புக்கொள்வது போலவும்" War and Peace நூலில் அவரே எழுதியிருப்பதாக உருட்டுகிறார்.

குப்பிகளைக் கொண்டுபோய்க் கொடுத்து உரையாடிவிட்டு வந்ததை அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பல இடங்களில் கூறியிருக்கிறார். லெப்.கேணல் குமரப்பா மற்றும் புலேந்திரன் ஆகியோரைக் கொழும்புக்கு அழைத்துச் செல்ல அனுமதித்தால்; குட்டிமணி , தங்கத்துரைக்கு நிகழ்ந்தது போலவும், பிந்துனுவெவ வில் நடந்ததுபோலவும்,நடப்பது உறுதி என்பதை நடந்தபிறகுதான் உறுதிசெய்யவேண்டுமென நினைக்கிறாரா இந்த உருட்டு லஜபதி? இதில் இன்னொரு நகைச்சுவை யாதெனில்; லெப்.கேணல் குமரப்பாவின் திருமணக் காலப்பகுதியில் அவருக்கு இந்திய இராணுவத்துடன் பழக்கமிருந்ததாகவும், அதனால் அவர்கள் சமாதானம் உண்டாக்கவே தமிழ்மண்ணிற்கு வந்ததாகவும் குமரப்பா நம்பியதாகவும் சொல்கிறார்.

லெப்.கேணல் குமரப்பா அவர்களது பதிவுத்திருமணமே நான்கைந்து நபர்களுடன் நடந்தது. லெப்.கேணல் திலீபன் அவர்களைச் சாகடித்த இந்தியாவை அதற்குப்பிறகு லெப்.கேணல் குமரப்பா நம்பியிருப்பாரா? இந்திய இராணுவத்துடன் அவருக்கு நன்குபழக்கமிருந்தால் அவரை பலாலியிலிருந்து விடுதலை செய்திருப்பார்கள் அல்லவா ? இவ்வாறான கதைகளை திருட்டுத் திராவிடாள் நம்பலாம். உலகத்தமிழர் நம்பப்போவதில்லை.
தனது நேர்காணலில் அடிக்கடி தமிழினப்படுகொலையாளி கமால் குணரட்ணவை மேற்கோள் காட்டுகிறார். அவர் எழுதிய Raod to Nandikadal ஐ மேற்கோள் காட்டுகிறார்.இதில் இன்னொரு குறிப்பிடத்த விடயம் இந்த திராவிட லஜபதிக்குத் தெரியவில்லை.
1999 ஆம் ஆண்டு பிரிகேடியர் கமால் குணரட்ண MPhil பட்டம் வாங்கியது சென்னைப் பல்கலைக்கழகத்திலாகும்.
தம்மிடம் பயில வருபவர்கள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளவும் அவர்களை பல்கலைக்கழகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கவும் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் சென்னைப் பல்கலைக்கழகம் அதைச் செய்யவில்லை. தமது சுயநலத்திற்காகச் சாதாரண மாணவர்களுக்கிடையே சாதிச்சண்டையை மூட்டிவிட்டு, மோதவிட்டுக் கொலை செய்பவர்கள் ; ஈழத்தமிழரைப் படுகொலை செய்த ஓர் இராணுவத்தளபதி சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும்போது கண்டிருக்கமாட்டார்களா ?
கண்டிருப்பார்கள்,ஆனால் காணாததுபோல் தவிர்த்திருப்பார்கள். ஏனென்றால் கமால் குணரட்ண பட்டம்பெற்றபோது தமிழக முதல்வராக இருந்தவர்.., தன்மானத்தலைவர்,கட்டுமர அறிஞர்,டாக்டர் கலைஞர் கருணாநிதி. கருணாநிதி உண்மையிலேயே ஈழத்தமிழர்பால் அன்புகொண்டிருந்தால், கமால் குணரட்ணவை சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கியிருக்கலாம். ஆனால் கருணாநிதிக்கும் ஈழத்தமிழர் அழியவேண்டுமென்ற ஆசை இருந்தால் அவர் எப்படி நீக்குவார் ?
லஜபதிக்கு இதையும் சொல்லிவிடுங்கப்பா...!

பாகம் 3




யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில், தேசியத்தலைவரை யேர்மனியின்  ஹி....ர் போல உருவகித்திருக்கிறார் லஜபதி. இதுதான் காழ்ப்புணர்ச்சியினதும் மனநோயினதும் உச்சநிலை.

நிற்க..!
யாழிலிருந்து தமிழ்முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒன்றும் திடீர் நிகழ்வு அல்ல. இது நீண்டநாள் நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. தமிழினத்துக்குள் மோதல்களைத் தவிர்க்க இனி வழியேதுமில்லை என்ற நிலையில் தலைவர் எடுத்த முடிவு இது. இது தொடர்பான விடயங்களைக் கோர்வையாகத் தருகிறேன்.
"தமிழர்கள் என்ற தேசிய இனத்துக்குள், பண்பாட்டளவில் மட்டும் சிறு மாறுதல்களைக் கொண்ட சமூகமாக முஸ்லிம் மக்கள் உள்ளனரே தவிர அவர்களும் தமிழர்களே" என 1990 ஆம் ஆண்டு, February மாதம் நிந்தவூரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் யோகி யோகரட்ணம் அவர்கள் தெரிவித்திருந்தார்.  அவ்வாறே கிழக்கில் பல இடங்களில் முஸ்லிம்களோடு நெருங்கி தவிபு சந்திப்புகளை மேற்கொண்டனர். இந்திய இராணுவம் வெளியேறியதும் தவிபுகள் வேகவேகமாக கிழக்கில் தமது அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்கான இரு சான்றுகளை இணைத்திருக்கிறேன். இதுதான் சிங்கள மற்றும் அந்நியசக்திகளைச் சினமேற்றிய விடயமாகும். 

சற்றே மாறுபாடாகச் சிந்திப்போம். வெளியேற்றுவதை விட, இலகுவாக முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கவேண்டுமென தவிபு நினைத்திருந்தால், அதற்குப் பல இலகுவான வழிகள் இருந்தன.

1. பிளவுகளை உயிர்ப்பூட்டும் இசுலாமியர்களை அடையாளம் கண்டு "மண்டையில் போடுதல்"

2. இசுலாமியர்கள் கூடும் இடங்களில் குண்டுகளை வைத்தல்.

3. பள்ளிவாசல்களில் தொழுகையை நிறுத்துதல்.

4.த+மி+ழீ+ழத்திற்குள் இசுலாமியர்களது வியாபாரங்கள் மற்றும் தொழில்களை முற்றாக நிறுத்துதல்.இந்த நான்கையும் தவிபுகளால் இலகுவாகச் செய்திருக்க முடியும். ஏனென்றால் இதே காலப்பகுதியில்தான் இந்திய இராணுவத்திடம் உணவுப்பொருட்களைப் பெறவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்ட பின்னரும்,இந்திய இராணுவத்தோடு தொடர்பில் இருந்தவர்கள் சிலருக்குத் "தோலுரிக்கப்பட்டது". ஆதலால் முஸ்லிம்களை அடக்கி அழிப்பதென்றால் இரண்டுநாட்களுக்குள் புலிகளால் அதைச் செய்திருக்குமுடியும். அவ்வாறு செய்திருந்தால் இந்திய அரசின் பலமடங்கு ஆதரவும் தவிபுகளுக்குக் கிடைத்திருக்கும். 

ஆனால் ஏன் அதைச் செய்யாமல் முஸ்லிம்களை வெளியேற்றும்  முடிவைப் புலிகள் தேர்ந்தெடுத்தனர் ? 


பாகம் 4

இசுலாமியர்களைப் புலிகள் ஏன் அமைதியாக வெளியேற்றினர் என்பதை எழுத முன்பு; 1990 ஆம்ஆண்டு தமிழகத்தில் நடந்தேறிய ஐந்து விதமான சம்பவங்களைக் குறிப்பிடுகிறேன். ஏனெனில் இந்த இடத்தில் இதை எழுதாவிட்டால் வேறு இடத்தில் இதைச் சொல்லவியலாது.


முதலாவது; 24.02.1990 அன்று பொதுச்செயலாளராகவிருந்த ஜெயலலிதா மீது கொலைமுயற்சி நடத்தப்பட்டது. அதில் அவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.




26.02.1990 அன்று EPRLF குழுவினரை கருணாநிதி சந்திக்கிறார்

மூன்றாவது; சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சந்திக்க கருணாநிதி அழைப்பு விடுக்கிறார்.


நான்காவது; 19.06.1990 அன்று பத்மநாபா குழுவினர் கொலை செய்யப்பட்டமை.

ஐந்தாவது; 20.06.1990 அன்று தமிழகத்தில் இனிப் போராளிக்குழுக்களுக்கு இடமில்லை என்றும், அனைவரும் தடைசெய்யப்படுகிறார்கள் எனவும் கருணாநிதி அறிவிக்கிறார். (அதற்குமுன்பே தவிபு அங்கிருந்து வெளியேறிவிட்டது).

EPRLF குழுவிற்குள் ஏற்பட்ட பிளவில், மற்றைய அணியே (டக்ளஸ் குழுவினர்) கொலைசெய்தது என்ற ஆதாரங்கள் கிடைத்தபோதும், அக்கொலையைப் பு+லி+களே செய்ததாக கருணாநிதி தெரிவிக்கிறார். இதை ஏன் இந்த இடத்தில் கூற வேண்டிய அவசியம் இருக்கிறதெனின், MGR நிதிவழங்கிய நாளிலிருந்து தவிபு மீது கருணாநிதிக்கு உண்டாகிய வன்மம் காரணமாக எந்தவிதத்திலாவது  கொலைகளில் பு+லி+களைச் சிக்கவைக்க கருணாநிதி முயல்கிறார். 
ஜெயலலிதா தனது பாதுகாப்பிற்காக மத்திய அரசிடமிருந்து கறுப்புப் பூனைப் பாதுகாப்பு அணியை வேண்டியது ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட விபத்தின் பின்னரேயாகும். "தீவிரவாத இயக்கங்கள் அதிகமாக தமிழகத்தில் நிலைகொண்டுள்ளமை அச்சத்தைத் தருகிறது" என கருணாநிதி கூற; தன்னை மோதியது திமுக கொடியுடன் வந்த ஊர்தியே என ஜெயலலிதா வெளிப்படையாகத் தெரிவித்தார். இல்லையெனின் இந்தப் பழியும் பு+லி+கள் மீதே சுமத்தப்பட்டிருக்கும்.

பத்மநாபா கொலையிலும் இன்றுவரை பு+லி+களையே டீம்கா உடன்பிறப்புகள் குற்றம் சாட்டுவதற்கு விதைபோட்டவர் கருணாநிதியே ஆவார். 

இந்திய இராணுவக் காலத்தின்போது EPRLF தமிழர்மண்ணில் நடாத்திய அட்டூழியங்களை அறிந்தபின்னரும், தமிழருக்கான தீர்வுக்காக தமிழரையே கொன்றொழித்த  EPRLF ஐச் சந்தித்து கருணாநிதி உரையாடுகிறார் என்றால் அவரது வன்மத்தை உங்களால் அளவிடமுடிகிறதா ? 

சொல்லொணாத் துன்பங்களை நிகழ்த்திய இந்திய இராணுவம் வெளியேறிய பிறகும், எத்தனையோ தமிழர்களைப் படுகொலை செய்தபிறகும், லெப்.கேணல் திலீபன் மற்றும் அன்னைபூபதி முதலாக ஆயிரம் தவிபு போராளிகளின் வீரச்சாவிற்குப் பிறகும்,  ஒட்டுக்குழுவான EPRLF இற்கு ஆதரவளித்தவர் கருணாநிதி என்பதை  லஜபதி எந்த இடத்திலுமே குறிப்பிடாமல்; 

MGR தான் தவிபுகளுக்கு நிதிவழங்கி, சிறிலங்கா - இந்திய ஒப்பந்தத்தைச் சீர்குலைத்தார் என  மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு, திராவிட லஜபதி கூறுவதும், அதை நெறியாளராகவிருந்து  தெலுங்கு கிருபாமோகன் உளமார ரசிப்பதும்,  கருணாநிதியின் வழி வந்த  வன்மங்களின் தொடர்ச்சியே ஆகும்.


பாகம் 5

தமிழ் முஸ்லிம்களை தமிழீழப்பகுதிகளில் இருந்து வெளியேற்ற முன்பு தமிழ் முஸ்லிம்களுடன் தவிபு எவ்வாறான உறவைக் கொண்டிருந்தது என்று ஆய்வுசெய்யவேண்டிய தேவை இருக்கிறது. அத்தோடு அந்த உறவில் தவிபு உண்மையில் பொறுப்புடன் நடந்துகொண்டதா என்பதை ஆய்வுசெய்யவேண்டிய தேவையும் இருக்கிறது. அவ்வாறே; முஸ்லீம்கள் தரப்பைப் பிரதிநிதித்துவப் படுத்திய முஸ்லீம் தலைவர்கள் அனைவரும் தவிபு களுடன் உண்மையுடனும் பொறுப்புடனும் நடந்துகொண்டனரா எனவும் உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. முதலில் முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய முக்கிய கட்சிகள் இரண்டு. முதலாவது முஸ்லீம் காங்கிரஸ், இரண்டாவது முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னணி. இதில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) தலைவரான அஷ்ரப் தனது சுயநல வாழ்விற்காக நடாத்திய திருவிளையாடல்களைப் பார்ப்போம்.



    



இந்திய இராணுவம் இருந்த காலப்பகுதியில் , தமிழர்கள் மீதான படுகொலைகளை  சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) முன்னின்று  நடத்தியது  என்பதை, "முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னணி" என்ற கட்சி வெளிப்படையாக அறிவித்தது. அதில் மூன்று (3,4,5) விடயங்களை மட்டும் அறியத்தருகிறேன்.

3. வடகிழக்கு மாகாண முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு இந்திய இராணுவமும் தமிழ்த்தேசிய இராணுவமும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும்,  ஆபத்தாக இருப்பதை அறிந்தும், எதற்காக முஸ்லீம் இளைஞர்களை  முஸ்லீம் காங்கிரஸ் தமிழ்த் தேசிய இராணுவத்தில் சேர்த்து இந்திய இராணுவத்தால் பயிற்றுவித்தது ?

4. வரதராஜப் பெருமாள் கொடுத்ததாகக் கூறிய சட்டவிரோத இந்தியப் போர்க்கருவிகளை,  முஸ்லிம்களுக்கு எதிராக அக்கரைப்பற்று, நிந்தவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகளில் முஸ்லீம் காங்கிரஸ் பாவிக்கவில்லை என்று  கூற முடியுமா ? ஏன் இவை இன்னும் மீளளிக்கப்படவில்லை  ?

5.முஸ்லீம் காங்கிரஸ் (SLMC)  அக்கரைப்பற்று உப்புக்கரைச்சி என்ற இடத்தில்,  சட்டவிரோதமாக இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுக்கவில்லை என்பதையும்,அவர்கள் பல முஸ்லிம்களை பகிரங்கமாக துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி படுகொலை செய்ய முயற்சித்ததையும்  மறுக்க முடியுமா ?(ஆதாரம் இணைத்துள்ளேன்) 


தவறான கொள்கைகளையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் கொண்ட ஒரு கட்சி தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட  முஸ்லீம் கட்சியாக இருப்பினும் அதன் தவறான கொள்கைகளும் கோட்பாடுகளும் இங்குள்ள முழு முஸ்லீம் சமூகத்தின்  கொள்கை என ஏனைய சமுதாய மக்களையும் வெளி உலகத்தையும் நம்பவைக்கும் செய்கைகளை, ஜமா அத்தே இஸ்லாமி, ஜம்மியத்துல் உலமா ஆகிய முஸ்லீம் நிறுவனங்கள் தட்டிக்கேட்கத் தவறினாலும் , இதை தேச விசுவாசமுள்ள எந்த முஸ்லிமும் அனுமதிக்க முடியாது.

(இந்த ஜமா அத்தே இஸ்லாமி என்ற அமைப்பின் உறுப்பினர்கள் பின்னர் ஜிகாத் படையில் இணைந்தனர்).

மேற்கூறிய எல்லாச் செய்திகளையும் சொல்வது நான் அல்ல;  57,1/4 Norris Canal road, Col -10 என்ற முகவரியில் இருந்து வெளிவந்த முஸ்லிம்களின் நாளிதழான "முஸ்லீம் செய்தி" என்ற இதழ் ஆகும்.  அதைவிடவும், இந்திய இராணுவ அடாவடித்தனங்களின் போது  முஸ்லீம் காங்கிரஸ் எவ்வளது தூரம் அமைதி காத்தது என்பதையும் அந்த நாளிதழ் வெளிப்படுத்தியிருக்கிறது பாருங்கள்.
" கிண்ணியா தாக்கப்பட்டது, இந்திய அமைதிப்படை அதன்பின்னணியில் இருந்தது. ஊரடங்கு நேரத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டு பல உயிர்கள் பலியாக்கப்பட்டன. கல்முனையில் கடைகள் எரிக்கப்பட்டன. பல முஸ்லிம்கள் கடத்தப்பட்டனர்.இந்திய அமைதிப்படை அதன் பின்னணியில் இருந்தது ( நடாத்தியது வரதராஜப்பெருமாள் தலைமையிலான தமிழ்த்தேசிய இராணுவம் ).நிந்தவூர் வாசிகள் கடத்தப்பட்ட போதும், சம்மாந்துறை எரிக்கப்பட்டபோதும், காரைதீவுச் சந்தியில் முஸ்லீம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் இதே அமைதிப்படை பின்னணியில் இருந்தது. இவ்வேளையில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) பிரதிநிதிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர் ? இந்த நடவடிக்கைகளினால் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டனர். இருபத்தைந்தாயிரதிற்கும் மேற்பட்ட முஸ்லிம்களது வீடுகள் கொள்ளையிடப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டும் அழிக்கப்பட்டன. ஏராளம் கால்நடைகள் கொள்ளையிடப்பட்டன . இவை அனைத்திற்கும் பொறுப்பு முஸ்லீம் காங்கிரசும் அதன் தலைவர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுமே .."

ஏன் இத்தனை அழிவுகளுக்கும் SLMC இதற்குப் பொறுப்பு என்று கூறப்பட்டது ? அதுதான் Horror climax. அதையும் அதே நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. "புலிப்பயங்கரவாதிகளிடம் இருந்து முஸ்லீம் சமூகம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டுமாயின், வரதராஜப் பெருமாளின் தேசிய இராணுவத்தில் முஸ்லீம் இளைஞர்கள் இணையவேண்டும்.." எனப் பரப்புரை செய்ததே சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சிதான்.

ஆனால்; இதே முஸ்லீம் காங்கிரஸ்தான் இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தைத் தொடக்கத்தில் எதிர்த்தது. இந்தியப்படையால் எமக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அவர்களே தமிழ் - முஸ்லீம் என்ற கலவரங்களைத் தூண்டி விடுகிறார்கள் என்றும் தொடக்கத்தில் SLMC கூறியது.

ஆனால் பின்னர்; இந்தியத் தூதுவர் Dixit ஐ  முஸ்லீம் காங்கிரஸ் தலைமைப்பீடம் சந்தித்த பின்னர்  நடைபெற்ற "கொடுக்கல் வாங்கல்களினால்",முஸ்லீம் காங்கிரஸ்  அனைத்தையும் மறந்து அவசர அவசரமாக தேர்தலில் பங்குகொள்ள வேண்டிய  நிர்ப்பந்தம் ஏற்பட்டது.இவ்வேளையில்; கிழக்குவாழ் முஸ்லிம் மக்களோடு நேரடிப் பிணைப்பை உண்டாக்க தவிபு கள் முயற்சியை மேற்கொள்கிறார்கள். அதன் விளைவாக ஓர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக இருந்த இரு கட்சிகளில்,( SLMC மற்றும் முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னணி ) SLMC ஓர் சுயநலத் தலைமையைக் கொண்டுள்ள கட்சி என்பதை அறிந்துகொண்ட தவிபு கள்; 16.04.1988 அன்று தமிழ்நாட்டின் சென்னை நகரில் முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னணி கட்சியின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடி, இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார்கள். இச்சந்திப்பில்; தவிபு களுக்குத் தலைமையாக தளபதி கிட்டு அவர்களும், முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னணிக்குத் தலைமையாக எம்.ஐ.எச் மொகியதீன் அவர்களும் சந்திப்பை வழிநடத்தி உடன்படிக்கை ஒன்றை எழுதினார்கள்.


பாகம் 6






தவிபுகள் சார்பாக தளபதி கிட்டுவும், மு.ஐ.வி.மு சார்பாக மொகியத்தீனும் பேச்சுவார்த்தை முடிவில் கூட்டாக ஒப்பமிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டனர். இது முஸ்லிம் காங்கிரசிற்கு (SLMC) இற்குத் தேள்கொட்டியது போலாயிற்று.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல உப்புக்கரைச்சி என்ற இடத்தில் இந்திய இராணுவத்திடம் பயிற்சிபெற்ற  முஸ்லிம் இளைஞர்களும், வரதராஜப்பெருமாளின் தமிழ்த்தேசிய இராணுவத்திடம் இந்திய ஆயுதங்களை வாங்கிய ஜமா அத்தே இஸ்லாமி குழுவினருமாக இணைந்து SLMC இன் ஆளுகைக்குட்பட்ட பிரிவாக மாறியிருந்தனர். 

16.04.1988 அன்று சென்னையில் தவிபுகளும், முஸ்லிம்.ஐ,வி.மு வும் சந்தித்ததை அறிந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அடுத்து வரவிருந்த மாகாணசபைத்தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று அதைக் கிழக்கு மக்கள் தமக்கு வழங்கிய ஆணையாக அடையாளப்படுத்தத் திட்டமிட்டது. 

19.11.1988 அன்று நடைபெற்ற மாகாணசபைத்தேர்தல் வாக்களிப்பு நிலையங்களில் பொது அதிகாரிகள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக ஆயுதம் தாங்கிய இந்திய இராணுவமே நிறுத்தப்பட்டது. வாக்களிப்பு நிலையங்கள் 4:00 மணியுடன் பூட்டப்படவேண்டும் என்ற தேர்தல் ஆணையாளரின் ஆணையை மீறி இரவு 7:00 மணிவரை வாக்களிப்பு நிலையங்கள் திறந்திருந்தன. வாக்குகள் எண்ணப்படும்போது வாக்காளர் பட்டியலில் பதியப்பட்ட எண்ணிக்கையை விடவும் அதிகளவான வாக்குகள் SLMC என்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிற்குப் போடப்பட்டிருந்தது. 

இவ்வாறான சித்து விளையாட்டகளூடாகவும், இந்திய இராணுவத்தின் முழுத் துணையுடனும் SLMC அந்தத் தேர்தலில் வெற்றியீட்டி தன்னைக் கிழக்கின் குரலாகப் பதிவுசெய்துகொண்டது. அதற்குத் தவறான வழியில் துணைநின்றதுமட்டுமன்றி, கள்ளவாக்குப் போடும் வேலையையும் இந்திய இராணுவம் செய்துகொடுத்தது. உலகிலேயே கள்ளவாக்குப் போடுவதற்குத் துணைநின்ற ஒரே இராணுவம் என்ற பெருமையும் இந்திய இராணுவத்திற்கே உண்டு.

அந்தத்தேர்தலில் நீதிக்குப் புறம்பாக SLMC  வெற்றிபெற்றமையானது எவ்வாறான அழிவுகளுக்கு வித்திட்டது என்பதை அடுத்த பகுதிகளில் எழுதுகிறேன்.

இந்த திராவிட லஜபதி தனது நேர்காணலின் இடைநடுவில் பல இடங்களில் இந்திய இராணுவத்தைப் புலிகள் முழுமையாக ஏற்று அடிபணிந்து நடந்திருந்தால் இன்று தமிழர்களுக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என உருட்டிய உருட்டில் நான் ஆடிப்போய்விட்டேன். 

தமிழர்களையும் தவிபுகளையும் எதிர்த்தும், சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்தும் இயங்கி பல இடங்களில் பிளவுகளை உண்டாக்கிய SLMC என்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை வெல்லவைக்க இந்தியா பாடுபட்டதற்கு நான் ஆதாரங்களை வைத்திருக்கிறேன். இதற்கு  உருட்டு லஜபதியிடம் பதில் உள்ளதா ? அல்லது தெலுங்கு திராவிட அடிவருடி கிருபாமோகன் இதையும் லஜபதியிடம் கேட்பாயா? 


பாகம் 7




கிழக்கில் புலிகளையும் இசுலாமியரையும் பிளவுபடுத்த, முஸ்லிம்காங்கிரஸ் மற்றும் ஜமா அத்தே இஸ்லாமி என்ற அமைப்பும்சேர்ந்து ஜிகாத் என்ற அமைப்பை இயக்கின. இந்த அமைப்புகளின் முதல் கொலை இரு தமிழ் முஸ்லிம் தலைவர்களே இந்திய இராணுவ காலப்பகுதியில் கிழக்கு வாழ் தமிழ் இசுலாமியரைப் பாதுகாக்க," ஏன் ஜிகாத் அமைப்பைத் தடைசெய்கிறோம்" என்ற தலைப்பில் தவிபு வெளியிட்ட கடிதத்தின் தமிழாக்கம் இது
************
தமிழர்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த, சிறிலங்காவின் பிரிவினைவாத அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஆயுதக்குழுவான ஜிகாத் மீது நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தவிபு தள்ளப்பட்டுள்ளது.
02.01.1988

Oct. 87 இல் படுகொலைசெய்யப்பட்ட மூதூருக்கான உதவி அரசாங்க அதிபர் ஆசிக் முகமட் மற்றும் Nov.87 இல் படுகொலைசெய்யப்பட்ட மூதுருக்கான முன்னாள் பா.உ அப்துல் மஜீத் ஆகியோரின் கொலைகளுக்கு இந்த அமைப்பே காரணமாகும்.

அவ்வாறே தவிபு உறுப்பினர் நஸார், மற்றும் காத்தான்குடியில் படுகொலைசெய்யப்பட்ட நான்கு பொதுமக்கள் மீதான கொலைகளுக்கும் இவர்களே காரணமாவார்கள். இந்தப்பிரதேசத்தில் வாழும் தமிழ் இசுலாமிய மக்கள் இதனால் கவலையுற்றிருக்கின்றனர்.

இந்தக்குழு மீது வேகமான நடவடிக்கை எடுக்குமாறு தவிபு வினை மக்கள் வேண்டியபோதும், இந்தப் பதட்டமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த தவிபு மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்தது.

எமது நிலையை இசுலாமிய மக்கள் புரிந்துகொண்டதோடு, எமக்கு ஆதரவளித்தும் வருகிறார்கள். பெருமளவு இசுலாமியத் தமிழ் இளைஞர்கள் தவிபு வுடன் இணைந்துவருகிறார்கள்.

அவர்களது வற்புறுத்தலாலும், பங்கேற்பினாலும் கடந்த Dec.87 இல் இந்த ஜிகாத் குழு மீது தாக்குதல் நடாத்தி, காத்தான்குடியில் 30 நபர்களையும், ஓட்டமாவடியில் 9 நபர்களையும் அழித்தோம்.

தமிழ் இசுலாமிய மக்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் EPRLF , Plote, மற்றும் TELO ஆகிய குழுவினரை, அவர்களது துரோக நடவடிக்கைகள் காரணமாகவும் நாம் தடைவிதித்துள்ளோம்.

************
(இவ்வேளையில் இதே பகுதியில் இந்தியஇராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 11 தமிழ் இசுலாமியர்களையும், அதற்குப்பழிவாங்கும் விதமாக இந்திய இராணுவம் மீது தவிபு நடாத்திய தாக்குதல் பற்றிய விபரங்களும் தொகுத்துவருகிறேன். விரைவில் வரும்)

லஜபதிராய் குறிப்பிடுகிற அதே Saitanic force புத்தகத்தில் இந்தக்கடிதம் இருக்கிறது. ஜிகாத் அமைப்பால் கொல்லப்பட்ட இசுலாமியத்தமிழர்கள் என்றும், இந்திய இராணுவத்தின் ஆயுதங்களையும் பயிற்சிகளையும் பெற்றவர்களே இதைச்செய்தார்கள் என்பதும் ஒருபுறமிருக்க, மட்டக்களப்பில் இந்தியஇராணுவமும் தமிழ்த்தேசிய இராணுவம் என்ற வரதராஜப்பெருமாளின் ஒட்டுக்குழுவும் இருந்தகாலத்தில் புலிகளால் எப்படிச் சுதந்திரமாக நடமாடிக் கொலைசெய்யமுடியும் என்பதுவும் லஜபதி என்ற திராவிடியானுக்கும் கிருபாமோகன் என்ற தெலுங்கு ஞமலிக்கும் தெரியாமலிருக்கலாம். ஆனால் ஈழத்தமிழர்களுக்கு வரலாறில் தொடர்பில் வடைசுடும் வகுப்பு எடுக்க முனையக்கூடாது.


பாகம் 8





   



இராஜீவ் காந்தியின் ஒப்பந்தத்தை ஏற்று தவிபு கள் நடந்திருந்தால்,  தமிழீழத்தில் பாலாறும் தேனாறும் ஓடியிருக்கும் என்று லஜபதிராய் உருட்டிய உருட்டுகளால் உண்மையில் பல உண்மைவரலாறுகள் நசுங்கித்தான் போய்விட்டன.

லெப்.கேணல் திலீபன் தொடங்கி  லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளையும், இன்னபிற போராளிகளையும் இராஜீவ்காந்தியின் படை நயவஞ்சகமாகக் கொன்ற கதை ஊரறிந்தது. அதற்குப் பிறகும்,அதைச் சகித்துக்கொண்டும் தவிபுகள் இராஜீவ் காந்தியோடு பேசத் தலைப்பட்டனர். ஆனால் அதற்குள்ளும் இராஜீவ்காந்தி விரித்த இன்னொரு நயவஞ்சக வலைபற்றிய செய்தியை திராவிட லஜபதிராய் ஏன் மறைத்தார் ?

11.09.1988 அன்று சென்னையிலிருந்த தளபதி கிட்டு உட்பட 170 போராளிகளை காரணம்கூறாமல் இராஜீவ்அரசு கைதுசெய்து சிறையில் அடைத்தது. சென்னையில் இருந்த சிறிலங்காவின் துணைத்தூதரின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக இது நிகழ்ந்தது. (MGR இறக்கும்வரை இராஜீவால் யாரையும் கைதுசெய்ய இயலவில்லை. அவரது இறப்பின் பிறகு சிறிதநாட்கள் ஜானகிஅம்மா பதில்முதல்வராக இருந்தார். அதன்பிறகு மத்தியஅரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் தமிழகஅரசு இயங்கியது) தமிழ்நாட்டில் மத்திய சிறையிலிருந்தபடியே 03.10.1988 அன்று தளபதிகிட்டு அவர்கள் இராஜீவிற்குக் கடிதம் எழுதினார்.

"...உங்கள் அரசின் பிரதிநிதிகளுடன் நாம் நடத்திய பேச்சுவார்த்தை முடிவடைந்து உடன்பாடொன்று எட்டப்பட முன்னரே அது முறிக்கப்பட்டது, வடக்கு கிழக்கில் ஏதாவது ஒருபகுதியில் 5 நாட்களுக்குப் போர்நிறுத்தம் செய்யப்பட்டால் எங்கள் தலைவர் பிரபாகரனை அங்கு வரச்செய்து, பேச்சுவார்த்தை விடயங்களைத்தெரிவித்து முடிவொன்றை எட்ட இலகுவாயிருக்கும்.ஆனால் என்னைக்கைதுசெய்து, எங்கள் வேண்டுகோளை அலட்சியம்செய்து சிறையில் அடைத்துவிட்டீர்கள்.சமரசம் பேசவென்று கூறியே என்னை உங்கள் அதிகாரிகள் இங்கு அழைத்துவந்தார்கள்,  ஆனால் இப்போது தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்துவைத்திருக்கிறீர்கள். சமாதானத்தை நிலைநிறுத்த எமது தலைவருடன் பேசுவதற்காகச் சென்ற எனது தோழன் லெப்.கேணல் ஜொனியை இந்திய இராணுவம் அழைத்துச் சென்று படுகொலை செய்தது. நாங்கள் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கவில்லை, அப்படி விளைவித்திருந்தால் நீதிமன்றில் எமைநிறுத்தித் தண்டனை வாங்கித்தாருங்கள்.இல்லையென்றால் எம்மைவிடுவித்து யாழ்ப்பாணம் செல்ல அனுமதி தாருங்கள். 10.10.1988 இற்குள் சரியான பதில் கிடைக்கவில்லையெனின் சென்னை மத்திய சிறையில், நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்துள்ளேன்...." 


லெப்.கேணல் திலீபனைப் போல,கிட்டுவையும் இந்தியா கொல்லப்போகிறது என்ற செய்தி உலகெங்கும் தீயாய்ப்பரவ, தவிபு களுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்த தினமணி நாளிதழ் கூட; "கிட்டுவை விடுதலை செய்" எனத் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டு 06.10.1988 அன்று செய்தி வெளியிட்டது.நிலமை தனக்கெதிராக மாறுவதைக்கண்ட இராஜீவ் உடனே, தளபதி கிட்டுவையும் ஏனையோரையும் தாயகம் செல்ல ஏற்பாடு செய்கிறோம்  எனக்கூறி வெளியே தகவலைப் பரப்பிவிட்டு, தளபதி  கிட்டுவைச் சாகடிக்கும் சதித்திட்டமொன்றைப் பின்னத்தொடங்கினார்.


பாகம் 9


          





11.10.1988 அன்று நள்ளிரவு சென்னை மத்திய சிறையில் இருந்த தளபதி கிட்டுவிற்கும் போராளிகளுக்கும் ஒரு தகவல் சொல்லப்பட்டது. நாளை காலை நீங்கள் "அனுப்பப்பட இருக்கிறீர்கள்" என்பதுதான் அந்தத்தகவல். இதற்கு Operation Kingfisher என RAW பெயர் சூட்டியிருந்தது. இத்திட்டம் உருவான இடம் டெல்லி. (இதை Indian Express நாளேடு பின்னர் விபரித்திருந்தது) கிடைத்த சந்தர்ப்பதிலெல்லாம் புலிகளை அழித்துவிடவேண்டுமென்பதில் இராஜீவ் காந்தி எவ்வளவு குறியாயிருந்தார் என்பதற்கும், அதற்காக RAW நடாத்திய திருகுதாளங்களுக்கும் இந்தச்சம்பவம் ஓர் வரலாறுப்பதிவு. அனுப்பப்படப்போகிறோமா ? எங்கே என்று வினவினார் தளபதி கிட்டு. "யாழ்ப்பாணம்" என்று ஒற்றை வரியில் சிறை அதிகாரியிடமிருந்து பதில் வந்தது. RAW விடமிருந்து சென்னை மாநகரக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சென்னை நகரத்துணைக்காவல் ஆணையாளர்கள், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள், RAW அமைப்பைச் சேர்ந்த ஓர் கண்காணிப்பாளர் தலைமையில் திட்டம் நகரத் தொடங்கியது. என்ன நடக்கப்போகிறது என்பது ஆரம்பத்தில் சென்னை நகரக் காவல் துறைக்கே தெரியவில்லை. அதிகாலை 1.30 மணிக்கு ஒரு காவல்பிரிவை நகரக்காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் அணிவகுக்கச் சொன்னார்கள். அவர்களை ஏற்றிக்கொண்டு 4 பேருந்துகள் சிறைச்சாலை நோக்கிச்சென்றன. அதிகாலை 2.30 இற்கு சிறையிலிருந்த தளபதி கிட்டு உட்பட ஏனையோரை பேருந்தில் ஏறுமாறு பணித்தது காவல்துறை.தளபதி கிட்டுவுக்கு ஏதோ உள்ளுணர்வு மறுத்தது.ஏதோ மோசமாக நடக்கப்போகிறது என்பதை அவர் உணார்ந்தார். அவரது சூழ்நிலைக்கேற்ற சிந்தனை தடாரென்று விழித்துக்கொண்டது. "நான் பேருந்தில் ஏறுவதென்றால் பழ.நெடுமாறன் வரவேண்டும் என்று தடாலடியாக ஒரு நிபந்தனையை முன்வைத்தார் கிட்டு.ஆனால் காவல்துறை மறுத்தது. "நீங்கள் வெளியே வரவில்லையென்றால், பலவந்தமாக வெளியேற்றிப்பேருந்தில் ஏற்றுவோம்" என்றார் காவல்துறை அதிகாரி. தளபதி கிட்டுவோடு அங்கே நின்ற ஏனைய தவிபு உறுப்பினர்கள், திடீரென்று "கடியடா குப்பியை" என்று கத்தினார்கள். கத்தியதுமட்டுமின்றி குப்பியை வாயில் வைத்துவிட்டார்கள். அவர்களிடம் குப்பிகள் இருந்தது பற்றி அதுவரை யாருக்கும் தெரியாது. சிறைக்காவலர்களுக்கே தெரியாது. தளபதி கிட்டு மூர்க்கமானார். "இஞ்ச பாருங்கோ, நாங்கள் உயிர்ப்பிச்சை எடுத்துப் போராட வரவில்லை. நான் ஒரு சொல்லுச் சொன்னால் அத்தனைபேரும் குப்பிகடிப்பார்கள். நாம் கூறுகின்ற நிபந்தனைகளுக்கு உட்படாவிடில் எங்கள் முடிவில் மாற்றமில்லை" என்றார் தளபதி கிட்டு. நெடுமாறன் அவர்கள் வராவிட்டாலும் பிரச்சனையில்லை, எம்மை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கமாட்டோம்" என உறுதியளிக்க வேண்டும் என்றார் கிட்டு. அதுவும் நான் உட்பட நம்மில் சிலர் பாதுகாப்பாக விமானம் ஏறிய பிறகுதான் ஏனையோரைச் சிறைச்சாலையிலிருந்து விமானத்தில் ஏற்றச்சம்மதிப்போம் என்பதையும் தளபதி கிட்டு தெளிவாக வலியுறுத்தினார். இதனால் RAW கடுப்பாகியது. இவர்களை இன்று விடுவிக்கிறோம் எனப் பத்திரிகைகளுக்கு வேறு அறிவித்துவிட்டோமே என்பதுதான் அவர்களுக்குத் தலையிடியானது. வேறுவழியின்றி 152 போராளிகளைச் சிறையில் வைத்தக்கொண்டு, தளபதி கிட்டு உட்பட ஏனையோரைத் தாம்பரம் விண்ணுந்து நிலையத்திலிருந்து ஏற்றி யாழ்ப்பாணம் அனுப்பியது இந்திய அரசு. RAW இன் Kingfisher திட்டம் யாதெனில்; அனைவரையும் விமான நிலையத்திற்கு ஏற்றிச் செல்வதாகக் கும்பலாக ஏற்றி, "வழியிலேயே தாக்கிவிட்டுத் தப்பியோடினார்கள்" என்ற பெயரில் அனைவரையும் போட்டுத் தள்ளுவதேயாகும். தளபதி கிட்டுவின் சமயத்திற்கேற்ற சிந்தனையால் போராளிகள் அனைவரும் அன்று உயிர்தப்பினர். அதுமட்டுமின்றி, நாம் இந்தப்பிராந்தியத்தில் பலமாக இல்லையென்றால், இந்தியா ஒருபோதும் தமிழீழத்தையோ, எமது போராட்டத்தையோ ஏற்றுக்கொள்ளாது என்பதையும் புலிகள் உணர்ந்தனர்.


பாகம் 10


                                                                 
     

    தவிபுகள் யாழிலிருந்து இசுலாம் மதத்தைத் தழுவிய தமிழர்களை  வெளியேற்றுவதற்கான அடிப்படை நீண்டகாலத்திலிருந்தே தீட்டப்பட்டதென்று லஜபதிராய் அடித்துவிட்டிருந்தார். அவ்வாறே தவிபு வில் போராளிகளாக இருந்த இசுலாமிய இளைஞர்களை தவிபுவின் தலைமை மதித்ததில்லை என்ற பொருள்படவும் ஒரு ஓட்டு ஓட்டியிருந்தார்.ஆனால் புலிகள் ஒருபோதும் மதவேறுபாடு பார்த்ததில்லை என்பதற்குக் கீழுள்ள செய்தி ஓர் எடுகோளாகும். இசுலாமைத் தழுவி,போராளிகளாயிருந்து  வீரச்சாவடைந்த மாவீரருக்கு தவிபுகள் நினைவுத்தூபி ழுப்பியது மட்டுமன்றி,பல இசுலாமிய ஓதுவார்களை அழைத்து வீரவணக்கக் கூட்டத்தை நடாத்தியது பற்றிய செய்தி இது. தெலுங்கு  கிருபாமோகனும், திராவிட அடிவருடி லஜபதிராயும் இவற்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இசுலாம் மார்க்கத்தைத் தழுவியிருந்த இப்போராளி மாவீரரானது 1989 ஆம் ஆண்டாகும். "....தமிழீழத் தாயகமண்ணை மீட்டெடுப்பதற்காக ஒவ்வொரு தமிழன் மட்டுமல்ல, மொழியால் தாயகம் மண் பிணைப்பால் ஒன்றுபட்ட அனைவரும் போராடவேண்டும்.." என வீரவேங்கை அசிம் ஆஷாத் நினைவு தூபி திறப்பு விழாவில் தவிபுமமு வின் தென்மராட்சி அரசியற்துறைப் பொறுப்பாளர் பாப்பா கூறினார். வீரவேங்கை அசிம் ஆஷாத்தின் ஓராண்டு நினைவுத் தூபி சாவகச்சேரி பஸ் நிலையம் முன்னர் பளிங்குக் கற்களால் அமைத்து, ஆஷாத்தின் உருவப்படம் திறந்துவைக்கப்பட்டது.  இதை வீரவேங்கை பிரமனின் தாயார் திருமதி பராசக்தி சோமசுந்தரம் திரைநீக்கம் செய்துவைத்தார். சாவகச்சேரி மொகைதீன் ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் ஜனாப் எம்.பீ  அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாப்பா மேலும் கூறியதாவது; இளைஞர் யுவதிகள் அனைவரும் பார்வையாளர்களாக இல்லாது பங்காளிகளாக மாறும் உரிமைப்போராட்டமே தமிழீழப்போராட்டம் என்றார். சாவகச்சேரி ஜும்மா பள்ளிவாசல் இமாம் எம்.ஜாபிர் பேசுகையில்; தமிழ்மொழியைத் தாய்  மொழியாகக் கொண்ட நாம் எமது மொழி, தாய் மண் என்பவற்றின்  சுதந்திரத்தைப் பேண ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என்கிறார்.  ஜனாப் எம்.அப்துல் காதர் கவிதை வடிவில் வீர அஞ்சலி செலுத்தினார்.  தொடர்ந்து தென்மராட்சி பிரதேச தவிபு களின் மகளிர் பொறுப்பாளர் அமுதினி  பேசுகையில், எமது பலம் மிக்க இயக்கத்தில் இருந்துகொண்டு பல அரிய தியாகங்களைப் பலர் செய்துள்ளனர் எனக்குறிப்பிட்டு உரையாற்றினார். ..."

தவிபுகள் எப்போதும் இசுலாமியர்களைத் தமிழர்களாவே நோக்கினார்கள், மத அடிப்படையில் பிரித்துப்பார்த்ததில்லை என்பதற்கு இதுவோர் சான்றாகும்.இவ்வாறு புலிகளோடு பிணைப்புற்று இருந்த இதே சாவகச்சேரி  மொகைதீன் ஜும்மா பள்ளிவாசலிலிருந்து தமிழர்களைப் பிளவுபடுத்தும் திட்டம் தொடங்கியது.  1990 ஆம் ஆண்டு, இசுலாமியரை தமிழீழத்திலிருந்து வெளியேற்றுவதற்கு முன்பாக, இந்தப் பள்ளிவாசலுக்குள் யாரும் நுழையமுடியாமல் புலிகள் தடைவிதித்தனர். ஏனெனில் இந்தப் பள்ளிவாசலில் இருந்தும் சிலர் வன்முறைக்கான நடவடிக்கைகளோடு அடையாளம் காணப்பட்டனர்.


பாகம் 11

 


                                                                                    


ஈழத்தில்;இசுலாம் மார்க்கத்தைத் தழுவி வாழ்ந்த தமிழர்களது வரலாறு பற்றிய அடிப்படை அறிவு லஜபதிராய்க்குப் பூச்சியம் என்பதை அவரது முதல் நேர்காணலிலேயே கண்டுவிட்டேன். ஏனெனில் திராவிட லஜபதியின் ஆய்வு முழுவதுமே 1987 இற்குப் பின்னானதுதான். அதிலும் பாதி கட்டுக்கதை.

இசுலாம் மார்க்கத்தைத் தழுவிய தமிழர்கள் தாமாக விடுதலைப்போராட்டத்தை விட்டுப்பிரியவில்லை, அவர்கள் சூழ்ச்சிகளுள் சிக்கவைக்கப்பட்டு அறியாமையின் விளைவாகப் பிரிக்கப்பட்டார்கள். தமிழர்களில் இசுலாம் மதத்தைத் தழுவியவர்களைப்பிரித்துவிட்டால், தமிழர்கள் பலவீனப்பட்டு விடுவார்கள் என சிறிலங்கா அரசாங்கம் கணக்குப்போட்டதற்குக் காரணம் இருக்கிறது. ஏனெனில் தமிழீழத்தை 1980 ஆம் ஆண்டிற்குள் அடைந்துவிடவேண்டும் எனக் கங்கணம் கட்டியவர்கள் இசுலாம் மார்க்கத்தைத் தழுவிய தமிழர்களேயாவர். வியப்பாக இருக்கிறதா ? அதுதான் உண்மை.

"எப்போது தமிழீழம் சாத்தியம்" என்று தேசியத்தலைவரிடம் கேட்கப்பட்டபோது, தலைவர் அதற்குக் கூறிய பதில் உள்ளக, வெளியகச் சூழ்நிலைகள் ஒரே நேர்கோட்டில் வரும்போது சாத்தியமாகும்,ஆனால் அதற்குக் கால எல்லை கிடையாது என்றார். இவ்வாறிருக்கையில் 1980 இற்குள் தமிழீழம் வேண்டுமெனஇசுலாம் மார்க்கத்தைத் தழுவியவர்கள் கூறினால் சிங்களத்திற்குத் தேள்கொட்டியது போல் இருக்குமல்லவா. தமிழர்களது ஆளும் தரப்பில் மதவேறுபாடு பார்க்காமல், தமிழர்களாவே அன்று தேர்தலில் போட்டியிட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக, களாக; "தமிழீழமே தீர்வு" என்ற ஒருமித்த குரலின் கீழ், கல்முனையில் சட்டத்தரணி சம்சுதீன்,சம்மாந்துறையில் காசிம் பாவா,புத்தளத்தில் மருத்துவார் இல்யாஸ், மூதூரில் மக்கீன் ஆகியோர் ஆவர்.இவர்கள் முஸ்லீம் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்தவர்கள்.அதுவும் புத்தளத்தில் நின்றபடி "தமிழீழமே தீர்வு" என 1977 இல் முழங்கியவர் மருத்துவர் இல்யாஸ் ஆவார். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் சீறிலங்கா அரசாங்கத்தின் சேவகர்கள், இவர்கள் முஸ்லீம்களின் தலைவர்களாக இருக்கத் தகுதியற்றவர்கள் என்றார் கல்முனை சம்சுதீன் அவர்கள். அதற்குமப்பால் இன்னொரு விடயமும் சொல்லவேண்டியிருக்கிறது. யார் செய்தார்கள் என்பதற்கான ஆதாரமேயின்றி, இன்றுவரை புலிகள்மேல் குற்றம் சுமத்தப்படும் காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைக்கெல்லாம் தலையாய படுகொலையான, அதுவும் சிங்களக்காவல்துறை யால் நேரடியாக பகல்வேளையில் நடாத்தப்பட்ட படுகொலையான புத்தளம் பெரியபள்ளிவாசல் படுகொலை பற்றி புத்தளம் வாழ் இசுலாமியத்தமிழர்கள் நன்கறிந்திருந்தனர். அப்படுகொலையை மூடிமறைத்து,அது முஸ்லிம்களே முஸ்லிம்களைக் கொன்றதாகப் பாராளுமன்றில் அரசாங்கம் பொய்யை அவிழ்த்துவிட்ட வேளையில், சிங்கள அரசின் அடிவருடிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புத்தளத்தலைவர் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் வாயே திறக்காமல் மௌனம் காத்தார். அந்த இடத்தில் துணிந்துநின்று, "தமிழ் இசுலாமியர்களைத் தாக்கியது சிங்கள இனவெறிக் காவல்துறையினரே" எனப் பாராளுமன்றில் முழங்கியதுமட்டுமன்றி விசாரணைமன்று அமைக்கவேண்டுமென அறைகூவல் விடுத்தவர் தந்தை செல்வா. (இதை 1976 ஆம் ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற தந்தை செல்வாவின் பிறந்தநாள்விழாவில் நன்றியோடு நினைவுகூர்ந்தவர் முஸ்லிம் லீக் தலைவர் Dr. கலீல் ஆவார்) அந்தளவிற்கு மதவேறுபாடின்றி ஒன்றித்திருந்த தமிழர்களை, மதத்தால்; குறிப்பாக முஸ்லீம்களாகப் பிரிக்கத் திட்டம் தீட்டப்பட்டது 1982 இற்குப் பின்னரேயாகும்.


பாகம் 12




யாழ்ப்பாணத்திலிருந்து இசுலாமியர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர்,சிறிலங்கா அரசு மற்றும் முஸ்லீம் கொங்கிரஸ் இணைந்து நடத்திய பரப்புரைகள் மற்றும் நகர்வுகளை முதலில் அடையாளம் காண்போம்.முதலாவதாக பொய்யான பரப்புரைகள் முடுக்கிவிடப்பட்டன. இந்தப்பரப்புரை நகர்வுகளில் இருந்த Dirty Tricks யாதெனில்;முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை புலிகளோடு தொடர்புபடுத்துவதும், தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் படுகொலைகளை இசுலாமியர்களோடு தொடர்புபடுத்துவதுமே ஆகும்.சிறிலங்காவின் "Dirty Tricks" பரப்புரை எவ்வாறு தமிழர்களுக்குள் மத அளவிலான (சைவம், முஸ்லீம்) பிரிவுகளை ஏற்படுத்தியது என அறிவது அவசியமானது.1990 இல் பிரேமதாச தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான போரைத் தொடங்கிய காலப்பகுதியில் Associated press நிறுவனம் London Times நாளிதழுக்கு 23.06.1990 அன்று ஓர் செய்தியை வழங்கியது. அடி நுனி அறியாமல் London Times அந்தச் செய்தியைப் பிரசுரித்துமிருந்தது.அந்தச் செய்தி இதுதான்: இலங்கையின் கிழக்குப் பகுதியில் 62 முஸ்லிம் கிராமவாசிகளை அரசுக்கு உளவாளிகளாச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழ் தீவிரவாதிகள் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் எதிர்க்கட்சி முஸ்லிம் தலைவர் (SLMC)தெரிவித்துள்ளனர். நிந்தவூரில் நடந்த இப் படுகொலைகள் போர் தொடங்கி 11வது நாளில் நடந்தன.புலிகளால் கொல்லப்பட்ட முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் சடலங்களை படையினர் கண்டுபிடித்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மறுநாளே நாடகம் தலைகீழானது.Associated press நிறுவனம் Sunday Times க்கு ஒரு செய்தி அனுப்பியது. அது LT நாளிதழில் 24.06.1990 அன்று வெளிவந்தது. இதோ அந்தச் செய்தி : தமிழ் பிரிவினைவாதிகள் 62 முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை வெட்டிக் கொன்றதாக வெளியான செய்தி பொய்யானது என நேற்று இராணுவம் ஏற்றுக்கொண்டது. தங்கள் முந்தைய அறிக்கையானது குடியிருப்பாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் தெரிவிக்கப் தெரிவிக்கப்பட்டது.

இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால்; இந்த குற்றச்சாட்டுப் பொய்யானது என அனைத்துலகச் செய்தி நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டது மற்றும் உலகெங்கிலும் உள்ள செய்தித்தாள்களில் வெளிவந்தது. சிறிலங்காஅரசு+முஸ்லிம் காங்கிரசின் நாடகம் பிசுபிசுத்துப்போனது. இந்தச்செய்தியைப் பரப்பியது சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் ஆகும். இவ்வாறான நகர்வுகளை ஏன் அவர்கள் அப்போது மேற்கொண்டார்கள் என M.M.சுபைர் என்ற ஆய்வாளர் எழுதிய கட்டுரையின் ஒருபகுதி திரைப்படிமத்தை மேலே இணைத்துள்ளேன். அதன் விளக்கம் கீழ்வருமாறு: 1983 தமிழின அழிப்புக் கலவரங்கள் மற்றும் 1984 சர்வகட்சி மாநாடு (APC) மற்றும் 1985 அரசியல் கட்சிகள் (PPC) மாநாடு ஆகியன தோற்றுப்போனதைத் தொடர்ந்து தொடர்ந்து, LTTE கிழக்கில் முஸ்லிம்களைப் போராட்டத்தில் இணைப்பதில் முழுமுனைப்புடன் செயற்பட்டனர். சில முஸ்லிம் இளைஞர்கள் புலிகளின் பகுதித் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். 1986 இல் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) 36 வயதான சட்டத்தரணியும் நன்றாகத் தமிழில் சொற்பொழிவாற்றக்கூடியவருமான MHM Ashroff தனது தமிழ்ச் சொற்பொழிவினால் கிழக்கில் விடுதலைப் புலிகளது ஆட்சேர்க்கும் முயற்சியை முடக்கி, அதிலிருந்து தடுத்து முஸ்லிம் இளைஞர்களை SLMC க்குள் உள்வாங்கினார். அதுமட்டுமல்ல அவர் அந்த இளைஞர்களை இராணுவத் துணைக்குழுக்களிலும் இணைத்தார். இந்தப் பிரளயங்களின் உட்புறங்கள் அப்பாவித்தமிழர்களுக்கு அறியக்கிடைக்கவில்லை. அதுவும் கொழும்பு வாழ் SLMC முஸ்லிம் எடுபிடி அமைச்சர்களின் தனிப்பட்ட நலன்களுக்காகத் தாம் பலியிடப்படுவதையும் இசுலாமிய இளைஞர்கள் அறியவில்லை.


To be continued......





DMK councilor involved in drug trafficking with the help of the Stalin government?

Did you know Nawas of DMK, aka Drug lord, is from the same hometown as a DStock abuser here who sits online & promotes propaganda of Tig...